Go Back

காளான் குடைமிளகாய் சாண்ட்விச்

குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம்.
Course Breakfast
Cuisine French

Ingredients

  • காளான்- 1 கப்
  • குடைமிளகாய் -1 கப்
  • நறுக்கிய வெங்காயம் -1
  • பூண்டு- 2 பல்
  • ஆலிவ் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  • மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்- 1 டீஸ்பூன்
  • உப்பு மற்றும் மிளகுத்தூள்- தேவையான அளவு
  • கோதுமை பிரட் - 4 துண்டு
  • சீஸ் - 2 டேபிள் ஸ்பூன்

Notes

  1. தவாவை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் ஆலிவ் ஆயில் அல்லது ஆலிவ் பட்டர் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. கழுவி நறுக்கிய மஸ்ரூம் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை சேர்க்கவும். தண்ணீர் விடும் வரை நன்கு வதக்கவும்.
  3. இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் இல்லை எனில்
  4. சீரகத்தூள், தனியா தூள் போன்றவை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
  5. பிரெட்டினை முக்கோண வடிவத்தில் நறுக்கி அதில் வதக்கிய கலவையை பரப்பவும். தேவைப்பட்டால் சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
  6. மற்றொரு பிரட் தூண்டினை மேலே வைத்து மிதமான சூட்டில் லேசாக வைத்து எடுக்கவும்.
  7. குழந்தைகளுக்கு சாஸ் வைத்து கொடுக்கலாம்.