குடற்புழு நீக்கும் குழந்தைகளுக்கான பாகற்காய் சாதம்
பாகற்காயின் கசப்பு தன்மை மற்றும் முட்டையின் புரோட்டின் என இரண்டும் சேர்த்து கிடைப்பதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சாதமாக இது இருக்கும்.
- தேவையானவை
- மெலிதாக சீவிய பாகற்காய்-1
- முட்டை -2
- சாதம் -1 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய தக்காளி -ஒன்று
- சீரகம்- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
- சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள் -கால் டீஸ்பூன
- எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
செய்முறை
பாகற்காயை நன்கு மெலிதாக சீவி, அதன் கசப்பு தன்மை நீங்குவதற்காக சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கி பின்பு மிளகுத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
பாகற்காய் சேர்த்து நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
கடாயில் பாகற்காயை ஒரு பக்கம் ஒதுக்கி முட்டையை தட்டி ஊற்றி நன்கு வதக்கிய பின் பின்பு பாகற்காயுடன் சேர்க்கவும்.
கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.