குழந்தைகளுக்கான பருப்பு சூப்
- தேவையானவை :
- துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- உரித்த பூண்டு - ஒரு பல்
- மஞ்சள் தூள் - தேவையெனில்
- தண்ணீர் - 8 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில் வேக வைக்கவும். (மஞ்சள் தேவையெனில் சேர்க்கலாம்)
3. இதனை நீங்கள் பிரஷர் குக்கரிலும் செய்யலாம்.
4. பருப்பு நன்றாக வெந்த பிறகு அதனை மத்து அல்லது கரண்டி கொண்டு மசித்துக் கொள்ளவும்.
5. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூப் போன்று கொடுக்கலாம்.