குழந்தைகளுக்கான பர்பிள் முட்டைகோஸ் சூப்
குழந்தைகள் சூப் குடித்தால் குடிக்க மறுக்கின்றார்கள் என்று கூறும் அம்மாக்களுக்கு இந்த சூப் நன்கு கை கொடுக்கும்.
- பர்பில் நிற முட்டைக்கோஸ் நறுக்கியது- இரண்டு கப்
- சமையல் எண்ணெய் அல்லது பட்டர்- 1 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம்-1
- கேரட்-1
- உருளைக்கிழங்கு-1
- சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- செய்முறை
கடாயினை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் முட்டைக்கோஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்களுக்கு காய்கறிகள் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
அடுப்பை அணைத்த பின் காய்கறிகள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு ஒன்றாக அரைக்கவும்.
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மேலே கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.
இதில் முட்டைகோஸ் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளும் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் இந்த ஒரே சூப்பின் மூலம் கிடைக்கும்.
மேலும் பார்ப்பதற்கும் நன்கு கவர்ச்சிகரமான வண்ணத்துடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.