Go Back

கேரட் பாலக்கீரை மசியல்

இந்த ரெசிபியில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்கள் போன்றவை நிறைந்திருப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடியது.

Ingredients

  •  கேரட்-1
  •  கீரை-மூன்று முதல் நான்கு இலைகள்
  •  சீரகத்தூள்-இம்மியளவு
  • பெருங்காயம்–இம்மியளவு

Notes

செய்முறை
  1. கேரட்டினை நன்கு கழுவி தோலினை நீக்கவும்.கீரையினையும் நன்கு கழுவி எடுக்கவும்.
  2. கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.கீரையினை பொடியாக நறுக்கவும்.
  3. கேரட் மற்றும் கீரை போன்றவற்றை குக்கரில் ஒரு கிண்ணத்தில் வைத்து ஆவியில் வேக விடவும்.
  4. இரண்டு விசில் வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
  5. இரண்டையும் ஆற வைத்து ஒன்றாக மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
  6. சீரகத்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி குழந்தைகளுக்கு பரிமாறலாம்.