Go Back

கொண்டக்கடலை பிரியாணி

உங்கள் குழந்தைகளுக்கு புரோட்டின் சத்து அதிகம் உள்ள நல்ல சத்தான மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கொண்டைக்கடலை பிரியாணி அதற்கு சரியான தீர்வாகும்.

Ingredients

  • வேக வைத்த கொண்டைக்கடலை- அரை கப்
  • வேகவைத்த சாதம்- ஒரு கப்
  • நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி- ஒரு கப்
  • நறுக்கிய காய்கறிகள் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையானவை- 1/4 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை டீ.ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
  • சீரகத்தூள் மற்றும் மல்லித்தூள்- கால் டீஸ்பூன்
  • நெய்- ஒரு டீ..ஸ்பூன்
  • தண்ணீர் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு

Notes

செய்முறை
கடாயில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் அளவிற்கு வதக்கவும்.
கொண்டைக்கடலை மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கிளறவும்.
மஞ்சத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
வேகவைத்த சாதத்தை சேர்க்கவும்.(அரிசி சேர்த்து வேகவைக்க நினைத்தால் ஊறிய அரிசியுடன் தண்ணீரை 1:2 என்ற விகிதத்தில் சேர்க்கவும்)
அடுப்பை மிதமான தீயில் வைத்து லேசாக கிளறவும்.
கொத்தமல்லியில் தலைகளை தூவி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.