Go Back

சக்கரை வள்ளி கிழங்கு குக்கீஸ்

சர்க்கரைவள்ளி கிழங்கினை அவித்து சாப்பிடலாம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதனை வைத்து பிஸ்கட் செய்யலாம் என்று சொன்னால் வித்தியாசமாக உள்ளதல்லவா?

Ingredients

  • வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு- அரை கப்
  • கோதுமை மாவு-1 கப்
  • நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- கால் கப்
  • நெய் அல்லது தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

Notes

செய்முறை
சக்கரைவள்ளி கிழங்கினை நன்கு மசிக்கும் அளவிற்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் மைதா, நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் மசித்த சக்கரவல்லி கிழங்கு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும். நன்கு மாவு போன்று பிசைந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குக்கீஸ் வடிவத்திற்கு தட்டிக் கொள்ளவும்.
மைக்ரோ ஓவனை ப்ரீஹீட் செய்து அதில் 170 டிகிரி செல்சியஸ் அளவிற்கு 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மாவினை வைக்கவும்.
மொரு மொருப்பாகும் வரை காத்திருக்கவும்.
ஆறவிடவும்.