சத்தான கறிவேப்பிலை தோசை
வீட்டில் நம் வழக்கமாக செய்யும் இட்லி, தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அதே சற்று வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமாக கொடுக்கும் பொழுது நமக்கு ஒரு பெற்றோராக திருப்தி ஏற்படும் அல்லவா?
- தேவையானவை
- கருவேப்பிலை இலைகள்- ஒரு கைப்பிடி
- இட்லி மாவு- 1 கப்
- துருவிய தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் -அரை டீ.ஸ்பூன்
- இஞ்சி- சிறு துண்டு
- மிளகு- 2-3
- நெய் அல்லது எண்ணெய் -சமைப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தமாகி கொள்ளவும்.
- மிக்ஸியில் கருவேப்பிலை, துருவிய தேங்காய், சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- நன்கு மென்மையாக அரைக்கவும்.
- இந்த பேஸ்ட்டினை தோசை மாவில் நன்கு கலக்கவும்.
- உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- தோசை கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
- பொன்னிறமானவுடன் திருப்பிப் போடவும்.
- இதனுடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.