சத்தான சக்கரை நெல்லி
நம் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக அதே நேரம் ஆரோக்கியமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் ஒரு நல்ல உணவினை கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும் அல்லவா!
தேவையானவை
நெல்லிக்காய்- 500 கிராம்
சக்கரை- ஒரு கப் (தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம்)
ஏலக்காய் தூள்- ஒரு டீஸ்பூன்
லவங்கத்தூள்- அரை டீஸ்பூன்
துருவிய ஜாதிக்காய்- கால் டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- நெல்லிக்காயினை நன்றாக தண்ணீரில் கழுவி ஒரு டவலால் துடைத்து எடுக்கவும்.
- கத்தியை வைத்து நெல்லிக்காயை அதன் வரிகள் இருக்கும் பக்கத்தில் நீள வாக்கில் கீறி விடவும்.
- பெரிய பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுக்கும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- நெல்லிக்காய் இணை அதில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். நெல்லிக்காய் அளவிற்கு வைத்தால் போதுமானது. மிகவும் குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீரை வடிகட்டி நெல்லிக்காயை ஆறவிடவும்.
- நெல்லிக்காய் ஆறியதும் நமக்கு விருப்பமான வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சக்கரை பாகு காய்ச்சும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.
- ஏலக்காய் தூள், லவங்கத்தூள் துருவிய ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
- நறுக்கி வைத்த நெல்லிக்காய் இணை போட்டு நெல்லிக்காய் சக்கரைப்பாகில் போட வேண்டும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு சக்கரை பாகு நன்றாக நெல்லிக்காயில் படும் அளவிற்கு சூடாக்க வேண்டும்.
- காற்று போகாத டப்பாவில் இதனை அடைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.