Go Back

சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி

குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

Ingredients

  • ஜவ்வரிசி-1 கப்
  • தண்ணீர்-ஒன்றரை கப்
  • ஏலக்காய்தூள் -1 சிட்டிகை

Notes

செய்முறை
  1. ஜவ்வரிசி நன்கு தண்ணீரில் கழுவி மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  2. கடாயில் ஒன்றை கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  3. ஊறவைத்த ஜவ்வரிசி நெய் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வரும் அளவிற்கு இடைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  5. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  6. குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  7. கிண்டும்போது தண்ணீர் குறைவாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
  8. ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.