Go Back

சம்பா ரவை கட்லெட்

மாலைப் பொழுது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்த திருப்தி நமக்கு உண்டாகும்.

Ingredients

  • சம்பா ரவை- 1 கப்
  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு-1
  • பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ்- 2 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- கால் டீ.ஸ்பூன்
  • மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

Notes

செய்முறை
ஒரு பவுலில் வேக வைத்த சம்பா ரவை மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கினை எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய கேரட் பீன்ஸ் மஞ்சள் தூள் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக மாவு பதத்திற்கு பிசையவும்.
சிறிது சிறிதாக கட்லெட் போன்று தட்டவும்.
தோசை கல்லினை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி கட்டலட்டினை மிதமான தீயில் வேக விடவும்.
பொன்னிறமாகும் வரை காத்திருந்து புரட்டி எடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமானால் கட்லெட் தயார்.
குழந்தைகளுக்கு தயிர் அல்லது வீட்டிலேயே செய்த தக்காளி சாஸ் கொண்டு கொண்டு பரிமாறலாம்.