Go Back

சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்

குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட்.

Ingredients

  • சர்க்கரைவள்ளிகிழங்கு- 2
  • பிரெட்தூள்- கால் கப்
  • சீரகத்தூள்-அரை டீஸ்பூன்
  • மல்லித்தூள்-அரை டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
  • உப்பு-சுவைக்கு ஏற்ப
  • சமையல்எண்ணெய்- தேவைக்கேற்ப

Notes

செய்முறை
  1. சர்க்கரைவள்ளி கிழங்கின் தோலை உரித்து சீவவும்.
  2. கடாயினை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
  3. சீவிய சர்க்கரைசக்கரவள்ளி கிழங்கினை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வதக்கவும். கிழங்கு லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  4. மல்லித்தூள் சீரகத்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.
  6. சிறிதளவு சூடு ஆறியதும் பிரட் தூளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் ஷேப்பில் தட்டி எடுக்கவும்.
  8. மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  9. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை புரட்டி வறுத்து எடுக்கவும்.
  10. டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.