சுவையான இன்ஸ்டன்ட் கொழுக்கட்டை ரெசிபி
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமல் முழுமையாகுமா?
- தேவையானவை
- அரிசி அவல்- 1 கப்
- நாட்டுச்சர்க்கரை- 1/2 கப்
- துருவிய தேங்காய்- 1/4 கப்
- ஏலக்காய் தூள்- 1/4 டீஸ்பூன்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
- அரிசி அவலினை நன்றாக கழுவி தண்ணீர் வடியும் அளவிற்கு வடிகட்டவும். தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- அவலினை கையினால் நன்றாக மென்மையாக உதிர்த்து விடவும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய்யை உருக்கி துருவிய தேங்காயை நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
- நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேங்காயுடன் நன்கு சேரும் அளவிற்கு கிளறவும்.
- மசித்து வைத்த அவல் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வைத்து கிளறவும்.
- நன்கு ஆறவிட்டு கைகளால் கொழுக்கட்டை பிடிக்கவும் அல்லது கொழுக்கட்டை மோல்டினை கொண்டு தேவையான வடிவத்திற்கு செய்து கொள்ளவும்.
- 8-10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.