சுவையான பாதாம் லட்டு
பாதாமில் நிறைந்துள்ள புரோட்டின், இரும்பு சத்து மற்றும் ஜிங்க் போன்றவை குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு பணிபுரிகின்றது.
- பாதாம்- ஒரு கப்
- நாட்டுச்சக்கரை-3-4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
- நெய்-1-2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் அல்லது ஓட்ஸ் பவுடர் மேலே தூவ-1-2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
1. ஒரு கப் பாதாமை 4-5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். கூறியதும் பாதாமின் தோலை நீக்கவும்.
2. தோல் உரித்த பாதாமினை நன்கு நைசாக மிக்ஸியில் அரைக்கவும். பவுடர் மென்மையாக இருக்க வேண்டும்.
3. மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பாதாம் பவுடருடன் நன்றாக கலக்குமாறு செய்யவும்.
4. ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி இந்த மிக்ஸரை கொட்டி இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு லேசாக வறுக்கவும்.
6. ஆரிய உடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டை பிடிக்கும் பொழுது சிறிதளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் எளிதாக இருக்கும்.
7. தேவைப்பட்டால் துருவிய தேங்காய் அல்லது ஸ்போர்ட்ஸ் பவுடரில் இதனை உருட்டி எடுத்துக் கொள்ளவும்.