சுவையான பிரெஞ்சு டோஸ்ட்
- பிரட் துண்டுகள்-4
- முட்டை-2
- துருவிய வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்
- பால்-1/2 கப்
- நெய் அல்லது பட்டர்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்.
செய்முறை
1.ஒரு பவுலில் முட்டையை ஊற்றி நன்றாக நுரை வரும் அளவிற்கு பாலை ஊற்றி அடிக்கவும்.
2.இதனுடன் வெல்லம் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
3.கரண்டியால் நன்றாக நுரை வரும் அளவிற்கு கலக்கவும்.
4.தோசை கல்லை சூடாக்கி, பிரட்டினை முட்டை கலவையில் முக்கி கல்லில் போடவும்.
5.இருபுறமும் பொன்னிறமாக அளவிற்கு எடுக்கவும்.
பொதுவாக பிரெஞ்சு டோஸ்ட் செய்யும்பொழுது சீனி பயன்படுத்துவதே வழக்கம். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி பனைவெல்லம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும்.