ஜவ்வரிசி இட்லி
குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் சுவையையும் விட்டுக் கொடுக்காமல் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஜவ்வரிசி இட்லியை செய்து கொடுக்கலாம்.
- ஜவ்வரிசி- ¾ கப்
- இட்லி ரவை- ஒரு கப்
- தயிர் -1.5 கப்
- தண்ணீர்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 1 டீஸ்பூன்
ஜவ்வரிசியை நன்றாக கழுவி ரவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதனை ஒரு நாள் இரவு அல்லது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
8 மணி நேரங்களுக்கு பிறகு ஊற வைத்த எல்லாவற்றையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
இட்லி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எப்பொழுதும் போல இட்லி சுட ஆரம்பிக்கலாம்.