Go Back

டேஸ்டியான கோக்கனட் அல்வா

கடைகளில் விற்கும் ஸ்வீட்டுகளில் சீனி சேர்க்கப்படுவதால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்வீட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கோக்கனட் அல்வாவை கொடுக்கலாம்.

Ingredients

  • துருவிய தேங்காய்- 1 கப்
  • நாட்டு சக்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு- 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்-1
  • நெய்- 2-3 டேபிள்ஸ்பூன்
  • தண்ணீர் -தேவையான அளவு

Notes

துருவிய தேங்காய் நாட்டு சக்கரை அரிசி மாவு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
கடாயை காய வைத்து அதில் நெய் ஊற்றவும்.
மிக்ஸியில் அரைத்த கலவையை கடாயில் போடவும்.
மிதமான தீயில் கட்டிகள் வராத அளவிற்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கடாயில் இருந்து நன்கு பிரிந்து வந்ததும் அடுப்பினை அணைக்கவும்.
குழந்தைகளுக்கு பரிமாறவும்.