ட்ரை ஃப்ரூட்ஸ் சாக்கோ பர்பி
குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நட்ஸ்களான முந்திரி, பாதாம் போன்றவை மட்டுமல்லாமல் பேரிச்சம்பழம் சேர்த்துள்ளதால் உடல் நலனுக்கு ஏற்றது.
- பேரிச்சை- 20-25
- முந்திரி
- பாதாம்- 10-15
- கோக்கோ பவுடர்- 2 டீஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
செய்முறை
மிக்ஸி ஜாரில் பேரிச்சை முந்திரி பாதாம் மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து அரைக்கவும்.
இந்த கலவையை ஒரு பவுலில் போடவும்.
கையில் நெய்யினை தடவிக் கொண்டு எலுமிச்சை அளவிற்கு உருண்டை பிடிக்கவும்.
தட்டையாக தட்டி நடுவில் முந்திரிப் பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான நட்ஸ் பர்பி ரெடி.