தேங்காய்பால் சாதம்
குழந்தைகளுக்கு நீங்கள் வழக்கமாக கொடுக்கும் சாத வகைகள் கொஞ்சம் போர் அடித்து விட்டால் இந்த தேங்காய் சாதத்தை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
- தேவையானவை
- அரிசி - 1 கப்
- நறுக்கிய வெங்காயம்-1
- பச்சை மிளகாய்- ஒரு துண்டு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
- காய்கறிகள் பீன்ஸ் கேரட் பச்சை பட்டாணி- அரை கப்
- தேங்காய் பால்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
- தாளிப்பதற்கு
- நெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
- கிராம்பு-2
- பட்டை-1
- சீரகம்-1/2 டீஸ்பூன்
- முந்திரி- ஒன்றரை டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. அரிசியை இரண்டு முதல் மூன்று தடவை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. குக்கரில் நெய் ஊற்றி தாளிப்பதற்கு தேவையானவற்றை போட்டு தாளிக்கவும்.
3. முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
4. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
5. தேவையான காய்கறிகள் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
6. அரிசியை சேர்த்து கிளறவும்.
7.1.5 கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
8. மூன்று விசில் வரும் அளவிற்கு வேக விடவும்.
9. குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.