நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காயை வெறும் வாயில் சாப்பிடும் பொழுது புளிப்பாக இருக்குமே? அதை எப்படி சாதமாக செய்வது என்று யோசிக்கின்றீர்களா?
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- பொடிப்பொடியாக நறுக்கிய நெல்லிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 2
- கடுகு-1 டீஸ்பூன்
- சீரகம்-1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
- பெருங்காயம்- இம்மியளவு
- பச்சை மிளகாய்- காரத்திற்கு ஏற்ப
- கருவேப்பிலை- தாளிக்க தேவையான அளவு
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- தண்ணீர்- இரண்டு கப்
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
செய்முறை
பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி 20-30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
நெல்லிக்காயை கொட்டைகளை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் என்னை சேர்த்து, கடுகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
துருவிய நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
குக்கரில் வடிகட்டிய அரிசி, இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வைக்கவும்.
சாதம் வெந்ததும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவினால் நெல்லிக்காய் சாதம் ரெடி