பாதாம் பிசின் சப்ஜா பால்
வெயில் காலத்தில் கூல்டிரிசுகள் கேட்டும் நச்சரிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த வீட்டிலேயே நாம் இதுபோன்று விதவிதமான ட்ரின்ஸ்கள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.
- தேவையானவை
- பால்- ஒரு கப்
- பாதாம் பிசின்-1 டீஸ்பூன்
- சப்ஜா விதைகள்-1 டீ ஸ்பூன்
- நாட்டு சக்கரை- தேவையான அளவு
செய்முறை
- பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது ஆறு முதல் 8 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
- பாதாம் பிசின் நன்கு ஓடிவிட்டால் ஜெல்லி போன்ற படத்திற்கு மாறிவிடும்.
- ஒரு டம்ளரில் ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
- ஊற வைத்த சப்ஜா விதைகளை சிறிதளவு சேர்க்கவும்.
- பால் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
- அதன் மேல் சிறிதளவு சப்ஜா விதைகளை சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.