Go Back

பூசணிக்காய் பான் கேக்

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு தான் பூசணிக்காய் பான் கேக்.

Ingredients

  • முட்டை-1
  • பட்டர்- 2 டேபிள் ஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
  • பால்- அரைக்கப்
  • பூசணிக்காய் மசியல்-1/3 கப்
  • கோதுமை மாவு- 3/4 கப்பல்
  • லவங்கத்தூள்-1/4 டீஸ்பூன்

Notes

செய்முறை
பவுலில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக அடிக்கவும்.
அதனுடன் உருக்கிய வெண்ணையை சேர்க்கவும்.
பின்பு பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கி கொள்ளவும்.
அரைத்து வைத்த பூசணிக்காய் விழுதை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
மற்றொரு பவுலில் கோதுமை மாவு மற்றும் லவங்கப்பட்டை தூள் சேர்த்து கிளறவும்.
இதனுடன் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த முட்டை மற்றும் பூசணிக்காய் கலவையை சேர்த்து மெதுவாக கிளறவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து பட்டர் தடவவும்.
தயாரித்து வைத்திருந்த மாவை தோசை போன்று ஊற்றாமல், ஊத்தாப்பம் போன்று சிறிய வட்டமாக ஊற்றவும்.
தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
குழந்தைகளுக்கான சத்தான பூசணிக்காய் பான் கேக் ரெடி.