Go Back

பைனாப்பிள் பிரைட் ரைஸ்

குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு சுவையான ரெசிபி தான் இந்த பைனாப்பிள் பிரைட் ரைஸ்.

Ingredients

  • வேக வைத்த சாதம்- ஒரு கப் உதிரியாக இருக்க வேண்டும்
  • பட்டர் அல்லது எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய பூண்டு- சிறிதளவு
  • முந்திரி பருப்பு- 8-10
  • உலர் திராட்சை- சிறிதளவு
  • நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் மற்றும் குடைமிளகாய்- அரைக்கப்
  • மசாலா தூள்- கால் டீஸ்பூன்
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள்- ஒரு கப்
  • கொத்தமல்லி இலைகள்-1 டேபிள்ஸ்பூன்

Notes

செய்முறை
கடாயை சூடாக்கி அதில் சிறிதளவு பட்டர் அல்லது எண்ணெயை ஊற்றவும்.
முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதற்கு பின்னால் உலர் திராட்சை, நறுக்கிய பூண்டு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
நறுக்கிய குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும்.
மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
வெட்டி வைத்த பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதங்க விடவும்.
அதற்கு பின்னால் ஏற்கனவே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி இலைகளை மேலே தூவவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி.