Go Back

ப்ரோக்கோலி பாஸ்தா

Ingredients

  • பாஸ்தா
  • ப்ரோக்கோலி இதழ்கள்- 2 கப்
  • கடலை எண்ணெய்- தேவையான அளவு
  • பூண்டு- 2 பல்
  • சீஸ் துருவியது - கால் கப்
  • உப்பு மற்றும் மிளகுத்தூள்

Notes

செய்முறை
  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். பாஸ்தாவினை அதில் போட்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு ப்ரோக்கோலியை அதில் சேர்த்து, பாஸ்தா மென்மையானதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஏதேனும் சந்தேகம் இருந்தால் பாஸ்தா பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பார்த்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு வாசனை வரும் அளவிற்கு வதக்கவும்.
  4. தண்ணீரில் வேக வைத்த ப்ரோக்கோலி மற்றும் பாஸ்தாவை சேர்க்கவும். கிளறி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  5. துருவியச் சீசை மேலே தூவி விடவும். சீஸ் உருகும் வரை நன்றாக கிளறவும்.
ப்ரோக்கோலி பாஸ்தா குழந்தைகளுக்கு சுவையை மட்டுமல்லாமல் நார் சத்துக்கள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றையும் அள்ளித்தரும் ஆரோக்கியமான உணவாகும்.