மாம்பழ ரவா கேசரி
மாம்பழத்தை நாம் அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். அதற்கு மேலே என்றால் ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடிப்போம். ஆனால் மாம்பழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு சுவையான கேசரி செய்து தரலாம்
- · ரவை- 1 கப்
- · அரைத்தமாம்பழம்- 1கப்
- · வெல்லம்- 1 கப்(ஒரு வயதுகுழந்தைகளுக்கு மேல்)
- · தண்ணீர்- 1 கப்
- · ஏலக்காய்தூள்- கால் டீ .ஸ்பூன்
- · குங்குமப்பூ- தேவைப்பட்டால்
- · வறுத்த நட்ஸ் - மேலே தூவுவதற்கு
செய்முறை
- மிக்ஸி ஜாரில் மாம்பழத்தை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
- பானில் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ,
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் ரவையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- ரவை அடி பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- தண்ணீர் ஊற்றி ரவை வேகும் வரை நன்கு கிளறவும்.
- அதன் பின் அரைத்து வைத்த மாம்பழம் மற்றும் ஏலக்காய் தூள், சேர்த்து கிளறவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை கேசரி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான மாம்பழகேசரி ரெடி.