Go Back

மிக்சடு சீட்ஸ் சப்பாத்தி

Instructions

  • கோதுமை மாவு -1 கப்
  • மை லிட்டில் மொப்பட் சீட்ஸ் பவுடர் மிக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • ஓமம்- 1 டீ.ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர்
  • நெய் அல்லது வெண்ணெய்

Notes

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீட்ஸ் பவுடர், ஓமம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
  2. சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
  3. தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்பொழுதும் போல பிசையவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
  4. சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  5. தோசை கல்லை சூடாக்கி சப்பாத்தியை தேய்த்து அதில் போடவும்.
  6. பொன்னிறமானவுடன் சப்பாத்தியை திருப்பி அதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
  7. நாம் சாதாரணமாக செய்யும் சப்பாத்தியை விட சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயமாக விரும்பி உண்பார்கள்.
  8. பொதுவாக குழந்தைகளுக்கு பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள்ளு விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றை வறுத்து கொடுத்தால் வெறும் வாயில் சாப்பிட மாட்டார்கள்.
  9. ஆனால் இதேபோன்று பொடியாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபியாக இது இருக்கும்.
  10. குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை மிகவும் முக்கியமாகும்.
  11. இந்த சத்துக்கள் இது போன்ற விதைகள் எல்லாம் அதிகமாக உள்ளது என்பதால் இவற்றை குழந்தைகள் விரும்பும் வடிவில் செய்து கொடுத்தால் அவர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.