மினி கேரட் சீஸ் ஆம்லெட்
முட்டை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற ரெசிபி தான் இந்த மினி கேரட் சீஸ் ஆம்லெட்.
- முட்டை-1
- துருவிய கேரட்- 2 டே.பூன்
- துருவிய சீஸ்- 1 டே.ஸ்பூன்
- நெய் அல்லது பட்டர்- 1/2 டீ.ஸ்பூன்
முட்டையை பவுலில் உடைத்து நன்றாக முறை வரும் அளவிற்கு கலக்கவும்.
அதில் துருவிய கேரட் மற்றும் சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் நெய் அல்லது பட்டர் ஊற்றி சூடாக்கவும்.
கலக்கி வைத்த முட்டையை சிறு சிறு ஆம்லெட்டுகளாக ஊற்றவும்.
பொன்னிறம் வரும் வரை காத்திருந்து புரட்டி போடவும்.
மறுபுறம் வெந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.