Go Back

ரவா புட்டு

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும்? என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் இது உங்களுக்கான பாரம்பரியமான ரவா புட்டு.

Ingredients

  • ரவை- 1 கப்
  • துருவிய தேங்காய்- அரை கப்
  • வெதுவெதுப்பான பால்- அரை கப்
  • நாட்டு சக்கரை -1-2 டே.ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்- சிறிதளவு
  • நறுக்கிய நட்ஸ் வகைகள்-1 டே.ஸ்பூன்
  • நெய்- 2 டீ.ஸ்பூன்

Notes

  1. ரவையை மிதமான சூட்டில் வைத்து நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்பு ஆறவிடவும்.
  2. பாலை சிறிது சிறிதாக ரவையில் ஊற்றி மெதுவாக பிசையவும். ஆனால் ரவை உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
  3. இட்லி குக்கரில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  4. ஒரு கடாயில் 1 முதல் 2 டீ.ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றவும்.
  5. நறுக்கி வைத்த டிரை ஃப்ரூட்ஸ்களை லேசாக நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
  6. ரவையின் மீது நட்ஸ் மற்றும் தேங்காய் பூ தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.