முளைகட்டிய கேழ்வரகு மாவு-2 மேசைக்கரண்டி
சர்க்கரைவள்ளிக் கிழங்கு(வேகவைத்து மசித்தது)-1
கேரட்(வேகவைத்து மசித்தது)-1
துருவிய பனீர்- ¼ கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்டை நன்றாக வேகவைத்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
2. அதனுடன் முளைகட்டிய கேழ்வரகு மாவு, துருவிய பனீர், கொத்தமல்லி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3. அனைத்தையும் நன்றாகக் கலந்து மென்மையான மாவாகப் பிசையவும். மாவு மிகவும் உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.
4. மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, விரல் அளவிலான நீளமான குச்சிகள் போல் வடிவமைக்கவும்.
5. தோசைக்கல்லில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி, மிதமான தீயில் சூடாக்கவும்.
6. ராகி குச்சிகளைத் தோசைக்கல்லில் வைத்து, அவ்வப்போது திருப்பி, லேசாகப் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
7. விரும்பினால், ஓவன் அல்லது ஏர் ஃப்ரையரிலும் நன்றாக வேகவைக்கலாம்.
8. குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன் சிறிது நேரம் ஆறவைத்து, உணவு மென்மையாகவும் எளிதில் மசிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.