Go Back

ராகி ஊத்தாப்பம்

குழந்தைகளுக்குகாலை உணவாக கொடுக்கக்கூடிய சத்தான ரெசிபி தான் இந்த ராகிஊத்தாப்பம். பொதுவாகவே உளுந்து மாவு தோசையை சாப்பிட்டுபழகிய குழந்தைகளுக்கு இது எப்படி கொடுக்கலாம்என்று நீங்கள் யோசித்தால் இந்த ரெசிபியை ட்ரைசெய்து பாருங்கள்.

Ingredients

  • ·       ராகிமாவு- ஒரு கப்
  • ·       அரிசிமாவு- கால் கப்
  • ·       கேரட்,பீன்ஸ், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
  • ·       நறுக்கியவெங்காயம்- கால் கப்
  • ·       சீரகம்-கால் டீ.ஸ்பூன்
  • ·       பெருங்காயம்-ஒரு சிட்டிகை
  • ·       உப்பு-சுவைக்கேற்ப
  • ·       தண்ணீர்- தேவைக்கேற்ப
  • ·       எண்ணெய்அல்லதுநெய்

Notes

செய்முறை
1.ஒரு பவுலில் ராகி மாவு, அரிசி மாவு, நறுக்கிய காய்கறிகள், வெங்காயம்,, சீரகம் பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
2.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கலக்கவும்.
3.தோசை கல்லை சூடாக்கவும். சாதாரணமாக ஊத்தாப்பம் சுடுவது போன்று சற்று கட்டியாக மாவினை ஊற்றவும்.
4.நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
5.குழந்தைகளுக்கான சுவையான ஊத்தாப்பம் ரெடி.