ஸ்வீட் கார்ன் கீரை தட்டை
ஸ்வீட் கார்னில் இயற்கையாகவே குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
- வேகவைத்த ஸ்வீட் கார்ன்- 1/2 கப்
- நறுக்கிய கீரை- 1/2 கப்
- கடலை மாவு-1/2 கப்
- மைதா மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- அரை கப்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட் கார்ன், நறுக்கிய கீரை, கடலை மாவு, மைதா மாவு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
தோசை கல்லை காயவைத்து தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்.
பிசைந்து வைத்த மாவினை தோசை கல்லில் வைத்து தட்டையாக தட்டவும்.
பொன்னிறமாகும் வரை 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
மற்றொருபுறம் திருப்பி போடவும்.
தயிர் அல்லது தேங்காய் சட்னி கொண்டு பரிமாற சுவையாக இருக்கும்.