Go Back

ஸ்வீட் பனானா தோசை

Ingredients

  • வாழைப்பழம்- 1
  • அரிசி மாவு- அரை கப்
  • கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  • பால்- கால் கப்
  • பனைவெல்லம்- 1 டேபிள் ஸ்பூன் தேவைப்பட்டால்
  • ஏலக்காய்தூள்- ஒரு சிட்டிகை
  • உப்பு- தேவைக்கேற்ப
  • நெய் அல்லது பட்டர்

Notes

செய்முறை
  1. ஒரு பவுலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து மசித்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. பின்பு பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  3. மேலும் இனிப்புச் சுவை தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால் பனைவெல்லத்தை காய்ச்சி வடிகட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
  4. ஏலக்காய்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
    தோசை கல்லை சுட வைத்து எப்பொழுதும் போல தோசை சுடுவது போன்று ஊற்றவும்.
  5. சிறிதளவு நெய் சேர்த்து தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
    குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை ரெடி.