ஹோம் மேட் ஓட்ஸ் மில்க்
உங்கள் குழந்தைகள் பசும்பால் குடித்து போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்த ஓட்ஸ் மில்க்கை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.
- ஓட்ஸ்- 1 கப்
- குளிர்ந்த தண்ணீர்- 4 கப்
- வெண்ணிலா எசன்ஸ்- தேவைப்பட்டால்
ஓட்சினை ஒரு மணி நேரத்திற்கு ப்ரீசரில் வைக்கவும்.
ஃப்ரீசரில் வைத்த ஓட்சை மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர்ந்த தண்ணீர் சேர்க்கவும்.
20 முதல் 30 நொடிகளுக்கு நன்றாக ஸ்மூத்தி போன்று அரைக்கவும்.
காட்டன் துணியில் நன்றாக பாலை வடிகட்டவும்.
தேவைப்பட்டால் சில துளிகள் வெண்ணிலா ட்ராப்ஸ் சேர்த்து கலக்கவும்.
சுவையான ஹோம் மேட் ஓட்ஸ் மில்க் ரெடி.