ஹோம் மேட் தக்காளி சாஸ்
குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் சட்னிக்கு பதிலாக இதனை செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- தேவையானவை
- பழுத்த தக்காளி-4
- பூண்டு-2 பல்
- எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
தக்காளியை நன்கு கழுவி மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு தண்ணீரில் வேக வைக்கவும்.
தக்காளியின் மேல் தோலினை உரித்து எடுக்கவும்.
மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டினை அதில் நசுக்கி போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அரைத்து வைத்த தக்காளி மசியல், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.