ஹோம் மேட் பாப்கார்ன் ரெசிபி
பாப்கானை கடையில் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் வீட்டிலேயே நம் குழந்தைகளுக்கு எளிதாக செய்து கொடுக்கலாம்.
- பாப்கார்ன் விதைகள்- அரை கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய்- 1.5 டேபிள்ஸ்பூன்
- உப்பு- இம்மியளவு
- நாட்டு சக்கரை- கால் கப்
- நெய்-1 டீஸ்பூன்
செய்முறை
- நன்கு கனமான அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
- ஒரு மக்காச்சோளத்தை போட்டு பாப்கார்ன் பொரிந்து வருகின்றதா என்பதை சோதனை செய்த பின்பு மீதமுள்ள பாப்கார்னை போடவும்.
- முடியை மேலே மூடி சிறிதளவு இடைவெளி விடவும். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் குலுக்கி விடவும்.
- வெடிக்கின்ற சத்தம் நின்றவுடன் அடுப்பை அணைக்கவும்.
- பாப்கார்ன்னை பெரிய பவுலில் கொட்டி பாதி பாதியாக பிரிக்கவும்.
- ஒரு பகுதி பாப்கார்ன்னில் உப்பு தேவைப்பட்டால் மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் ஆகியவை சேர்த்து குலுக்கி விடவும்.
- இனிப்பான பாப்கார்ன் செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் கால் கப் நாட்டுச்சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
- மிதமான தீயில் பாகினை உருக விடவும்.
- மீதமுள்ள போட்டு ஒரு கிளறு கிளறவும்.