4 வகையான அரிசிப்பொரி ஸ்நாக்ஸ்
அப்பொழுது முதல் இப்பொழுது வரை குழந்தைகளுக்கு பிடித்த சலிக்காத தின்பண்டம் என்றால் அது நிச்சயமாக அரிசி பொரி தான். குழந்தைகளுக்கும் சாப்பிட எளிது மற்றும் எளிதில் செரிமானமாகும்,வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்பதால் ஒரு எவர் கிரீன் ஸ்நாக்ஸ் ஆக இந்த அரிசி பொரி உள்ளது
மஞ்சள் பொரி
ஒரு கடாயில் அரை டீஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றவும்.
2-3 கருவேப்பிலை போட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அதற்கு பின்னர் ஒரு கப் பொரியை சேர்த்து மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
மசாலா பொரி
கடாயில் அரை டீஸ்பூன் நெய்யை ஊற்றவும்.
அதில் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் ஓமத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்க்கவும்.
அதற்கு பின்னால் ஒரு கப் பொரியை சேர்க்கவும்.
மிதமான சூட்டில் வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விடவும். வடநாட்டில் செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான சிற்றுண்டி தான் இதுவாகும்.
கருவேப்பிலை பொரி
ஒரு கடாயில் அரை டீஸ்பூன் நெய்யினை ஊற்றவும்.
அதில் அரை டீஸ்பூன் கருவேப்பிலை பொடி சேர்க்கவும்.
அதன் பின்னர் ஒரு கப் பொரி சேர்த்து கிளறி விடவும்.
தேவைப்பட்டால் நெல்லிக்காய் பொடியையும் சேர்க்கலாம். மிதமான சூட்டில் ஐந்து மடங்கு ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
நட்ஸ் பொரி
கடாயில் அரை டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
ஒரு கப் பொரி சேர்த்து நன்றாக கிளறவும்.
கால் டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
மிதமான சூட்டில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கிளறி விடவும்.