Go Back

குழந்தைகளுக்கான கொள்ளு நூடுல்ஸ் ரெசிபி

மைதா,செயற்கைநிறமூட்டிகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபி!

Ingredients

  • 1 பாக்கெட் கொள்ளு நூடுல்ஸ்
  • 15 (சிறியதுண்டுகள்) பன்னீர்
  • 2 பல் பூண்டு
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 2 டே.ஸ்பூன் முட்டைக்கோஸ்
  • 2 டே.ஸ்பூன் கேரட்
  • 1 டே.ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 டே.ஸ்பூன் எண்ணெய்

Notes

செய்முறை
  1. ஒரு பாக்கெட் நூடுல்சினை ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
  3. கடாய் சூடானதும் பட்டரை ஊற்றவும்.
  4. அதனுடன் பன்னீர் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  5. ஒரு ஓரமாக வைக்கவும்.
  6. கடாயில் பட்டரை ஊற்றவும்.
  7. அதனுடன் பூண்டு சேர்த்து சேர்க்கவும்.
  8. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  9. அதன்பின் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
  10. டேஸ்ட் மேக்கர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. பன்னீர் சேர்க்கவும்.
  12. ஏற்கனவே தயாரித்து வைத்த நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
  13. நன்றாக கிளறி 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
  14. இதமாக பரிமாறவும்.