Kollu Noodles in Tamil: மைதா,செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபி!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு ஒரே குஷிதான் . அதை அடிக்கடி வீட்டினில் நம்மை செய்து தரும்படி குழந்தைகள் நச்சரிப்பதுண்டு. ஆனால் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன,
மெழுகுகள் சேர்க்கப்படுகின்றன மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுகின்றன என்ற செய்தியானது நாம் செவிகளில் அடிக்கடி விழுவது வழக்கம்.
இதனால் நாம் அதனை செய்து கொடுக்கும் போதே ஒரு வித பயத்துடன் தான் செய்து கொடுப்போம். இனிமேல் அந்தக் கவலை வேண்டாம். ஏனென்றால் குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸினை பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை ரசாயன பொருட்கள் ஏன் மைதா கூட இல்லாமல் ஹெல்தியாக கொடுக்கலாம்.
மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கொள்ளு நூடுல்ஸ் ரெசிபியானது நம் பாரம்பரிய சிறுதானியமான கொள்ளினை பிரதானமாக கொண்டதால் குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமளிக்கக்கூடியது.
கொள்ளில் இயற்கையாகவே கால்சியம்,புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் இதில் பன்னீர் சேர்த்துள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.
பன்னீரில் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்குவதற்கு தேவையான கால்சியம் போதுமான அளவில் நிறைந்துள்ளது.மேலும் கேரட் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமளிக்கக்கூடியது.
சரி இப்பொழுது இந்த சுவையான நூடுல்ஸினை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என படிப்படியாக பார்க்கலாம்.

Kollu Noodles in Tamil:
தேவையானவை
- கொள்ளு நூடுல்ஸ்– 1 பாக்கெட்
- பன்னீர் -15 (சிறிய துண்டுகள்)
- பூண்டு -2 பல்
- வெங்காயம் நறுக்கியது- 1
- முட்டைக்கோஸ்- 2 டே.ஸ்பூன்
- கேரட் -2 டே.ஸ்பூன்
- தக்காளி சாஸ் -1 டே.ஸ்பூன்
- எண்ணெய் -2 டே.ஸ்பூன்
செய்முறை
1.ஒரு பாக்கெட் நூடுல்சினை ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
2.தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
3.கடாய் சூடானதும் பட்டரை ஊற்றவும்.
4.அதனுடன் பன்னீர் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5.ஒரு ஓரமாக வைக்கவும்.
6.கடாயில் பட்டரை ஊற்றவும்.
7.அதனுடன் பூண்டு சேர்த்து சேர்க்கவும்.
8.வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
9.அதன்பின் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
10.டேஸ்ட் மேக்கர் சேர்த்து நன்றாக கிளறவும்.
11.பன்னீர் சேர்க்கவும்.
12.ஏற்கனவே தயாரித்து வைத்த நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
13.நன்றாக கிளறி 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
14.இதமாக பரிமாறவும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள டேஸ்ட் மேக்கரை உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கடையில் விற்கும் நூடுல்ஸினை கொடுப்பதைவிட இந்த மாதிரி இயற்கைப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பது உடலுக்கு நலம்.
மேலும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த மாதிரி நூடுல்ஸினை கொடுப்பது அவர்கள் உடல்நலத்திற்கு மேலும் ஆரோக்கியமளிக்கும். இந்த ரெசிபியானது நம் குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்க ஏற்றது.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் ரெசிபியினை கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான கொள்ளு நூடுல்ஸ் ரெசிபி
Ingredients
- 1 பாக்கெட் கொள்ளு நூடுல்ஸ்
- 15 (சிறியதுண்டுகள்) பன்னீர்
- 2 பல் பூண்டு
- 1 வெங்காயம் நறுக்கியது
- 2 டே.ஸ்பூன் முட்டைக்கோஸ்
- 2 டே.ஸ்பூன் கேரட்
- 1 டே.ஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 டே.ஸ்பூன் எண்ணெய்
Notes
- ஒரு பாக்கெட் நூடுல்சினை ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
- கடாய் சூடானதும் பட்டரை ஊற்றவும்.
- அதனுடன் பன்னீர் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- ஒரு ஓரமாக வைக்கவும்.
- கடாயில் பட்டரை ஊற்றவும்.
- அதனுடன் பூண்டு சேர்த்து சேர்க்கவும்.
- வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- டேஸ்ட் மேக்கர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பன்னீர் சேர்க்கவும்.
- ஏற்கனவே தயாரித்து வைத்த நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- இதமாக பரிமாறவும்.
Leave a Reply