Go Back

குழந்தைகளுக்கான எள்ளு சாதம்

குழந்தைகளுக்கும்இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து கொடுத்தால் உடல் நலத்திற்கு மிகவும்ஆரோக்கியமானது.

Ingredients

  • 4 டேபிள்.ஸ்பூன் வெள்ளை எள்
  • 2 டேபிள்.ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 டீ.ஸ்பூன் சீரகம்-

Notes

செய்முறை
  1. வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளு சீரகம் மற்றும் உளுந்தை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. நன்றாக ஆறவிடவும்.
  3. மூன்றையும் சேர்த்து ஒன்றாக அரைக்கவும்.
  4. குழந்தைகளுக்கான எள்ளு பொடி ரெடி.
எள்ளு  பொடி சாதம் தயாரிப்பது எப்படி?
  • சூடான சாதத்தினை ஒரு பவுலில் எடுத்து முன்னரே நன்றாக மசித்துக்கொள்ளவும்.
  • நெய் மற்றும் 4 டீஸ்பூன் எள்ளு பொடி நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • குழந்தைகளுக்கான எள்ளுசாதம் ரெடி.