Go Back

ஹோம் மேட் பன்னீர்

குழந்தைகளுக்கு புரோட்டீன் மற்றும் கால்சியத்தினை அள்ளித் தரும் பன்னீரினை  நாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

Ingredients

  • லிட்டர் 2  பசும்பால்
  • 2 எலுமிச்சை

Notes

  1. இரண்டு லிட்டர் பசும்பாலை பானில் ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும்.
  2. நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. பாத்திரத்தின் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  4. பால் பொங்கியதும் அடுப்பினை அணைக்கவும்.
  5. 5 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.
  6. 2 எழுமிச்சை பழச்சாற்றினை பிழிந்து இரண்டு முதல் மூன்று தடவை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். (ஒரே நேரத்தில் ஜூஸ் முழுவதையும் ஊற்றக்கூடாது)
  7. பால் திரண்டு வரும் வரை இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  8. ஒரு துணியில் பாலினை ஊற்றி திரட்டை தனியாக பிரித்து எடுக்கவும்.
  9. எலுமிச்சையின் புளிப்பு தன்மை போவதற்கு தண்ணீரில் துணியினை இரண்டு முதல் மூன்று தடவை முக்கி எடுக்கவும்.
  10. துணியினை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
  11. அரை மணி நேரத்திற்கு பிறகு எடையினை எடுக்கவும்.
  12. தேவையான வடிவிற்கு பன்னீரை  நறுக்கவும்.
  13. குழந்தைகளுக்கு தேவையான பன்னீர் ரெடி