Paneer Recipe in Tamil: குழந்தைகளுக்கு புரோட்டீன் மற்றும் கால்சியத்தினை அள்ளித் தரும் பன்னீரினை நாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பன்னீர் என்பது குழந்தைகள் நம் வீட்டில் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களில் ஒன்று.அசைவ உணவினை அதிகமாக எடுத்துக் கொள்ளாத குழந்தைகளுக்கு புரோட்டீனை தருகின்ற சத்தான உணவும் பன்னீர் தான். சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பன்னீர் குருமா என்றால் அலாதியான பிரியம் தான்.இதனாலேயே பன்னீரினை கடைகளில் அடிக்கடி வாங்கி சமைக்கும் அம்மாக்கள் நம்மில் அதிகம்.
ஆனால் சிறிதளவு பன்னீரினை நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். மேலும் அதனை எப்படி தயாரிக்கின்றனர் என்ற விவரமும் நமக்கு தெரியாது.ஆனால் பன்னீரை இரண்டே பொருட்களை கொண்டு எளிதில் நாம் வீட்டிலேயே செய்யலாம்.
இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் ரெசிபியை எளிதாக வாரம் ஒரு முறை நீங்கள் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மாட்டுப் பாலில் செய்த பன்னீரே சிறந்தது. மாட்டு பால் கிடைக்காத பட்சத்தில் கொழுப்பு நீக்கப்படாத ஃபுல் க்ரீம் மில்க்கை நீங்கள் உபயோகித்து பன்னீர் செய்தால் சரியான பதத்தில் பன்னீர் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் சீரகம் சேர்த்து சீரக பன்னீர் போன்ற ரெசிபிகளையும் நீங்கள் செய்து கொடுக்கலாம்.
Paneer Recipe in Tamil:

Paneer Recipe in Tamil:
- பசும்பால்-2 லிட்டர்
- எலுமிச்சை- 2
செய்முறை
1.இரண்டு லிட்டர் பசும்பாலை பானில் ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும்.
2.நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
3.பாத்திரத்தின் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
4.பால் பொங்கியதும் அடுப்பினை அணைக்கவும்.
5)5 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.
6)2 எழுமிச்சை பழச்சாற்றினை பிழிந்து இரண்டு முதல் மூன்று தடவை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். (ஒரே நேரத்தில் ஜூஸ் முழுவதையும் ஊற்றக்கூடாது)
7.பால் திரண்டு வரும் வரை இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
8.ஒரு துணியில் பாலினை ஊற்றி திரட்டை தனியாக பிரித்து எடுக்கவும்.
9.எலுமிச்சையின் புளிப்பு தன்மை போவதற்கு தண்ணீரில் துணியினை இரண்டு முதல் மூன்று தடவை முக்கி எடுக்கவும்.
10.துணியினை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
11.அரை மணி நேரத்திற்கு பிறகு எடையினை எடுக்கவும்.
12.தேவையான வடிவிற்கு பன்னீரை நறுக்கவும்.
13.குழந்தைகளுக்கு தேவையான பன்னீர் ரெடி.
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை மாட்டு பால் கொடுக்க கூடாது என்றாலும் தயிர் மற்றும் பன்னீர் ஆகியவை எளிதில் செரிமானமாகக்கூடும் என்பதால் அவற்றை ஆறு மாத காலம் ஆரம்பித்ததிலிருந்தே கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு முதன் முறையாக பன்னீர் கொடுக்கும் போது முதலில் சிறிய துண்டு கொடுத்து பழக்க ஆரம்பிக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
ஹோம் மேட் பன்னீர்
Ingredients
- லிட்டர் 2 பசும்பால்
- 2 எலுமிச்சை
Notes
- இரண்டு லிட்டர் பசும்பாலை பானில் ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும்.
- நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பாத்திரத்தின் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
- பால் பொங்கியதும் அடுப்பினை அணைக்கவும்.
- 5 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.
- 2 எழுமிச்சை பழச்சாற்றினை பிழிந்து இரண்டு முதல் மூன்று தடவை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். (ஒரே நேரத்தில் ஜூஸ் முழுவதையும் ஊற்றக்கூடாது)
- பால் திரண்டு வரும் வரை இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ஒரு துணியில் பாலினை ஊற்றி திரட்டை தனியாக பிரித்து எடுக்கவும்.
- எலுமிச்சையின் புளிப்பு தன்மை போவதற்கு தண்ணீரில் துணியினை இரண்டு முதல் மூன்று தடவை முக்கி எடுக்கவும்.
- துணியினை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
- அரை மணி நேரத்திற்கு பிறகு எடையினை எடுக்கவும்.
- தேவையான வடிவிற்கு பன்னீரை நறுக்கவும்.
- குழந்தைகளுக்கு தேவையான பன்னீர் ரெடி
Leave a Reply