Go Back

குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா

குழந்தைகளுக்குஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும்ஸ்பீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வாஅதற்கு சரியான தீர்வாக அமையும்.

Ingredients

  • 1 கப் சுரைக்காய் துருவியது
  • கால் கப் கோக்கனட் சுகர்
  • 1 டே.ஸ்பூன் டிரைஃப்ரூட் பவுடர்
  • 1 டே.ஸ்பூன் நெய்
  • இம்மியளவு ஏலக்காய்தூள்
  • முக்கால் கப் பால்

Notes

செய்முறை
  1. கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
  2. சுரைக்காயை அதில் போடவும்.
  3.  8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
  4.  பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாகவும்.
  5.  டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
  6. அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
  7.  குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.