Suraikai Halwa for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும் ஸ்வீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வா அதற்கு சரியான தீர்வாக அமையும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சுரைக்காயில் இயற்கையாவே தண்ணீர் சத்தும்,நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது. இதை நாம் பொரியலாக செய்து கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள்.
ஆனால் இப்படி செய்து கொடுத்தால் சுரைக்காய் போன இடம் தெரியாது. சுரைக்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இந்த வைட்டமின்கள் பெரும் துணையாக அமையும்.
மேலும் இதில் ட்ரை ஃப்ரூட்ஸ் பவுடர் மற்றும் கோக்கனட் சுகர் ஆகியவை சேர்த்துள்ளதால் அல்வாவிற்கு மேலும் சுவை கூடும். ட்ரை ப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழங்கள் இயற்கையாகவே குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடையை உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்ய வல்லது.

Suraikai Halwa for Babies in Tamil:
தேவையானவை
- சுரைக்காய் துருவியது -1 கப்
- கோக்கனட் சுகர் -கால் கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 1 டே.ஸ்பூன்
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய்தூள்- இம்மியளவு
- பால் -முக்கால் கப்
செய்முறை
1.கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
2.சுரைக்காயை அதில் போடவும்.
3.8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
4.பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு கிளறவும்.
5.டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
6.அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
7.குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
இந்த ரெசிபியானது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு உகந்தது. இதில் சீனிக்கு பதிலாக கோக்கனட் சுகர் எனப்படும் தேங்காய்த்துருவலில் இருந்து தயாரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்த்துள்ளேன். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம்,குழந்தைகளுக்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் நாட்டுச்சக்கரை போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
Ingredients
- 1 கப் சுரைக்காய் துருவியது
- கால் கப் கோக்கனட் சுகர்
- 1 டே.ஸ்பூன் டிரைஃப்ரூட் பவுடர்
- 1 டே.ஸ்பூன் நெய்
- இம்மியளவு ஏலக்காய்தூள்
- முக்கால் கப் பால்
Notes
- கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- சுரைக்காயை அதில் போடவும்.
- 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
- பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாகவும்.
- டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
- அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
Leave a Reply