7 matha kulanthai unavu in tamil:7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்… (இந்திய குழந்தைகளுக்கானது)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்கள் குழந்தை 7 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில் ஒரேவிதமான உணவை நீங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தால் அது குழந்தைக்கு போரடித்துவிடும். மேலும் விளையாடுவதில் ஆர்வமாக உள்ள குழந்தைக்கு புதுவித சுவையோடு உணவை கொடுக்க வேண்டியது சரியானதாக இருக்கும்.
குழந்தைக்கு உணவை கொடுக்கும் போது பல்வேறு வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு உணவை குழந்தை ரசித்து சாப்பிடும் வகையில் கொடுப்பது பலன் தரும். உணவை பல்வேறு விதமாக கொடுக்க முயற்சிக்கும் போது குழந்தை சாப்பிடும் நேரமானது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்.
குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது அதற்கேற்ற மாதிரியான சின்ன சின்ன பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். இதன் மூலம் குழந்தைக்கென உணவு தயாரிப்பதும் எளிது. சுத்தமாகவும் இருக்கும்.
1) பிரஷர் குக்கர்
சில்வரால் ஆன சிறிய சைஸ் பிரஷர் குக்கர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அலுமினியத்தை விட எவர்சில்வர் பாத்திரம் சிறந்தது. இதில் நீங்கள் குழந்தைக்கு பருப்பு சாதம், காய்கறி மற்றும் பழங்களை வேகவைத்துக் கொடுக்கலாம். இதனையும் குழந்தைக்கு உணவு கொடுக்க பயன்படும் ஸ்பூன் ஆகியவற்றை வெந்நீரைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2) புட் ப்ராசசர்
குழந்தைக்கென தனியான புட் ப்ராசரர் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் குழந்தைக்கு கொடுக்கும் காய்கள் மற்றும் பழங்களை வெட்டுவது, மசிப்பது, துருவுதல், ஜூஸ் செய்தல் என அனைத்தும் செய்ய வேண்டும். எனவே இது உங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கும். இவற்றையும் முறையாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
3)ஸ்டெரிலைசர்
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்வதற்கென ஸ்டெரிலைசர்கள் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அதற்கு பதிலாக வெந்நீரை கொண்டு சுத்தம் செய்வது கூட சிறந்தது தான்.
4) மிக்ஸர் கிரைண்டர்
குழந்தையின் உணவு தயாரிக்க அவசியமான பொருட்களில் இதுவும் ஒன்று. குழந்தைக்கென பிரத்யேகமாக ஒரு மிக்ஸி ஜாரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் மசாலா பொருட்களை அரைக்கும் மிக்ஸியில் குழந்தையின் உணவையும் சேர்த்து அரைப்பதை தவிர்க்க பிரத்யேக ஜாரை பயன்படுத்தலாம்…
5) உருளைக்கிழங்கு மசிக்கும் கருவி
வேகவைத்த உருளைக்கிழங்கை கையால் மசிப்பதை விட இதற்கென பிரத்யேகமாக கிடைக்கும் கருவியை பயன்படுத்தி எளிதாக மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
6) குழந்தைக்கென உள்ள உயரமான நாற்காலி
குழந்தை உள்ள வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய பொருள் இது. ஏனெனில் குழந்தையின் முதுகுப்பகுதிக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, எளிதாக உணவை ஊட்டுவதற்கு ஏற்றது இது. இந்த நாற்காலியில் குழந்தையை உட்கார வைத்து உணவு கொடுப்பதன் மூலம் உணவு சிந்துவதை சிறிதேனும் தடுக்க முடியும்.
7) உணவு கொடுக்கும் பாத்திரம் மற்றும் ஸ்பூன்கள்
சந்தைகளில் விற்கும் பாத்திரங்கள் அல்லது நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் கிண்ணங்களை கொண்டு குழந்தைக்கு உணவளிக்கலாம். ஆனால் குழந்தைக்கு உணவை ஊட்ட பயன்படும் ஸ்பூன் மென்மையான முனை கொண்டதாக இருக்க வேண்டும்.
5 மற்றும் 6 வது மாதங்களில் நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு 2 வேளை மட்டுமே உணவு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் குழந்தையின் வளர்ச்சி அதிகமாகும் இந்த 7 வது மாதத்தில் அதனை நீங்கள் 3 வேளையாக அதிகரிக்க வேண்டியது கட்டாயம்.
அடிப்படை விதிகள்:
1) குழந்தைக்கு 7 வது மாதத்தில் உணவளிக்கும் போது அதை நாளொன்றுக்கு 3 வேளையாக அதிகரிக்க வேண்டும். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என பிரித்து கொடுங்கள். அதேநேரம் குழந்தைக்கு போதுமான சத்துகளை வழங்கும் தாய்ப்பாலையும் கொடுத்து வாருங்கள். தாய்ப்பாலை எந்த சூழலிலும் நிறுத்த வேண்டாம். காலை 9 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி என 3 வேளைகளிலும் உணவை கொடுங்கள்.
2) குழந்தைக்கு ஒவ்வொரு முறை உணவளிக்கும் போதும் அது 90 முதல் 100 மில்லி கொண்ட உணவாக இருத்தல் போதுமானது
3) உணவின் தன்மையானது ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பூனில் எடுக்கும் போது எளிதாக இருக்கும் படி இருத்தல் அவசியம்.
4) உணவை கொடுக்கும் போது குழந்தை படுத்த நிலையில் இல்லாமல் உட்கார்ந்த நிலையில் கொடுப்பது தான் சரியானது.
5) சமைப்பதற்கு முன்பும் குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன்பும் அதனை பாத்திரங்களை எல்லாம் நன்றாக வெந்நீரில் கழுவிய பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
6) புதுவகையான உணவை கொடுக்கும் போது 3 நாள் சோதனையை பின்பற்றுங்கள்.
குழந்தைக்கு என்னென்ன உணவுகளை இந்த காலகட்டத்தில் கொடுக்கலாம் என ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறோம். இதில் உள்ள உணவுகள் எல்லாம் குழந்தையின் ஆரோக்யத்திற்கு ஏற்றது என்பதால் இதனை கொடுக்க முயற்சி செய்யுங்கள்…
7 matha kulanthai unavu in tamil:
முதல் வாரம்:
நாள் | காலை | மதியம் | இரவு உணவு |
திங்கள் | அரிசி கஞ்சி | பருப்பு சாதம் | வேகவைத்து மசித்த ஆப்பிள் |
செவ்வாய் | ஓட்ஸ் கஞ்சி | பொங்கல் | காய்கறி சூப் |
புதன் | ரவை கீர் | கேரட் சேர்ந்த பருப்பு சாதம் | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வியாழன் | பார்லி கஞ்சி | நெய் சாதம் | மசித்த வாழைப்பழம் |
வெள்ளி | ஓட்ஸ் கீர் | ஏதேனும் ஒரு பொங்கல் | திராட்சை ஜூஸ் |
சனி | சிவப்பரிசி உப்புமா | ராகி கஞ்சி | கேரட் பீட்ரூட் சூப் |
ஞாயிறு | வேககைத்து மசித்த உருளைக்கிழங்கு | தக்காளி சேர்த்த பொங்கல் | சப்போட்டா ஜூஸ் |
2வது வாரம்:
நாள் | காலை | மதியம் | இரவு உணவு |
திங்கள் | ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி | பரங்கிக்காய் சாதம் | திராட்சை ஜூஸ் |
செவ்வாய் | சிவப்பரிசி கீர் | சர்க்கரை பொங்கல் | வேகவைத்து மசித்த உருளை பீட்ரூட் |
புதன் | ஆப்பிள், தானியம் சேர்த்த கஞ்சி | மிளகு நெய் சாதம் | வேகவைத்து மசித்த கேரட் |
வியாழன் | சத்துமாவு | கீரை சாதம் | வேகவைத்து மசித்த ஆப்பிள் பேரிக்காய் |
வெள்ளி | சம்பா ரவை கஞ்சி | மசாலா பொங்கல் | வேகவைத்து மசித்த புடலங்காய் |
சனி | இட்லி | உருளைக்கிழங்கு சாதம் | ஆப்பிள் ஜூஸ் |
ஞாயிறு | ஓட்ஸ் உப்புமா | காய்கறி சாதம் | ஆரஞ்ச் ஜூஸ் |
3வது வாரம்:
நாள் | காலை | மதியம் | இரவு உணவு |
திங்கள் | ராகி கஞ்சி | பருப்பு சாதம் | வேகவைத்து மசித்த சுரைக்காய் |
செவ்வாய் | ஓட்ஸ் வாழைப்பழ கஞ்சி | பாலக்கீரை சாதம் | சப்போட்டா ஜூஸ் |
புதன் | அரிசி கஞ்சி | பொங்கல் | சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்தது |
வியாழன் | சத்துமாவு | நெய் சாதம் | வேகவைத்து மசித்த கேரட் |
வெள்ளி | வேகவைத்த தோசை | காய்கறி சாதம் | திராட்சை ஜூஸ் |
சனி | ராகி கஞ்சி | ஏதேனும் ஒரு சாதம் | காய்கறி சூப் |
ஞாயிறு | அரிசி கீர் | சுரைக்காய் சாதம் | ஆப்பிள் ஜூஸ் |
4வது வாரம்:
நாள் | காலை | மதியம் | இரவு உணவு |
திங்கள் | கோதுமை, பாதாம் கஞ்சி | தக்காளி சாதம் | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
செவ்வாய் | ஓட்ஸ் கீர் | மசாலா பொங்கல் | கேரட் ஜூஸ் |
புதன் | கோதுமை கஞ்சி | பரங்கிக்காய் சாதம் | வேகவைத்து மசித்த பேரிக்காய் |
வியாழன் | ராகி கஞ்சி | மிளகு நெய் சாதம் | வேகவைத்து மசித்த பீட்ரூட் |
வெள்ளி | தோசை | புடலங்காய் சாதம் | சப்போட்டா ஜூஸ் |
சனி | ரவை கஞ்சி | சர்க்கரை பொங்கல் | வேகவைத்து மசித்த உருளை |
ஞாயிறு | சிவப்பரிசி கஞ்சி | காய்கறி சாதம் | திராட்சை ஜூஸ் |
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply