Little Moppet Heart Foundation
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மருத்துவத்துறையைச் சேவை எனச் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், பல மருத்துவர்களின் புறக்கணிப்பால் இன்று மருத்துவர்களின் மீது இருக்கும் நம்பிக்கை பாதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் இதயங்களுக்காக இதயமாக நின்று வேலை செய்யும் ஒரு தம்பதி.
ஆம்… மதுரையில் காலூன்றி நிற்கிறது லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
எத்தனையோ வரிகளில் சொல்ல நேர்ந்தாலும், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும். ‘மனிதம்’ தழைத்திருக்கிறது. அன்பு, கருணை, சேவை இவர்கள் மூலம் துளிர்த்திருக்கின்றன. இதயங்களுக்காக இவர்களின் இதயங்கள் ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருக்கின்றன. மதுரையில் அசத்தும் டாக்டர் தம்பதியர்கள் டாக்டர் ஹேமப்ரியா மற்றும் இவரது கணவர் டாக்டர் கோபி.
உயிர்காக்கும் லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்
குழந்தைகளை தெய்வம் என்று சொல்வார்கள். அதைப் பலரும் வெறும் வார்த்தைகளால் சொல்லியிருப்போம். இவர்களின் கண்கள் குழந்தைகளை தெய்வமாக பார்த்து இருக்கின்றன. ஆம்… ‘அன்பே சிவம்’. கண்கள் வழியாகக் காணும் இன்னொரு உயிருக்கு உயிர் கொடுக்கும் மனிதம் இவர்கள். இதைத்தான் அன்பே சிவம் என்பார்கள். நம் இந்தியாவில் இப்படியான தம்பதிகளின் சேவைப் போற்றப்பட வேண்டியது; வரவேற்கத்தக்கது; மலர் தூவி பாராட்டப்பட வேண்டியது அவசியம்.
மதுரையில் ஏழ்மையின் பிடியில் இருந்து தவிக்கும் குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னை, Coronary heart disease, Congenital heart defect போன்ற பிரச்னைகளுக்கு இலவசமாக மருத்துவ கேம்ப் நடத்தி, தேவைப்படுபவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்கின்றனர். பலர் காய்ச்சலுக்கு மருந்துகூட இலவசமாகக் கொடுக்கத் தயாராக இல்லாத சூழலில் இதய அறுவை சிகிச்சை என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று. இந்தத் தம்பதியரும் இதே மண்ணில் பிறந்து மனிதத்தை மீண்டும் துளிர்க்க செய்திருப்பதில் நமக்குப் பெருமை. குழந்தைகளின் நலன் காக்க எத்தனையோ சட்டங்கள், அமைப்புகள் ஆனால் அதையெல்லாம் தாண்டி இவர்களாக முன்னெடுத்து தொடங்கிய லிட்டில் மொப்பெட் ஃபவுண்டேஷனால் பல குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுகின்றன.
டாக்டர் ஹேமப்ரியா, அடிப்படையில் மருத்துவர் ஆனால் லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் எனும் ஆர்கானிக் உணவுகளைக் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக நல்ல முறையில் தயார் செய்து மதுரையிலும் சென்னையிலும் லிட்டில் மொப்பெட் ஸ்டோர் வைத்திருக்கிறார். இவரது கணவர் டாக்டர் கோபி, குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர். இருவரும் கைகோர்த்துத் தொடங்கியது, இந்த லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன். இவர்களின் முயற்சியில் சின்னச் சிறு உயிர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புக்கான முக்கியக் காரணம் இவர்களின் முயற்சியும் சேவையும். அந்த இதயங்களுக்காக இவர்கள் அன்றாடம் வேலை செய்கின்றனர்; கேம்ப் நடத்துகின்றனர்; பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
சமீபத்தில் சி.என்.என் நியூஸ் சேனலில் இவர்களின் சேவைப் பற்றி ப்ரோக்ராம் ஒளி பரப்பினார்கள். டாக்டர் ஹேமப்ரியா பற்றியும் அவரது கணவரான டாக்டர் கோபி பற்றியும் இவர்களின் சேவையைப் பற்றியும் அழகாகச் சொல்கிறார்கள். இந்த நியூஸ் கிளிப் பார்க்க, இங்கே கிளிக் செய்யுங்கள்.
https://www.facebook.com/TamilMyLittleMoppet/posts/760378030818846
நம்மில் பலர் பணத்தைக் கோவில் உண்டியில் போடுகிறோம். அதற்குப் பதிலாக வாழும் கடவுள்களாகிய குழந்தைகளின் நலனுக்காக செலவழிப்பதில் தவறேதும் இல்லையே. சிந்திப்போம். இந்தத் தம்பதியர்கள் நமக்கு ஓர் சிறந்த உதாரணம். எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காத்து நல்வாழ்வு அளிக்கும் இந்தத் தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்.
பொருளாதார வசதியிருப்போர் தங்களது உடல்நல பிரச்னைகளுக்கு மருத்துவம் செய்துக்கொள்ள வசதி இருக்கிறது. ஆனால், ஏழ்மையில் சிக்கியிருப்போரின் நிலை இதற்கு எதிர்மாறானது. பணம் இல்லையெனில் மருத்துவமின்றி உயிர் போகும். இப்படி ஒவ்வொரு ஏழ்மையின் பிடியில் இருந்து உயிருக்காகத் தவிக்கும் குழந்தைகள் இப்படித்தான் தினம் தினம் போராடுகின்றன. குழந்தைகளை இப்பூவுலகில் பூக்க வைப்பதும் வாடி மடிய வைப்பதும் உதவி செய்வோரின் கைகளில் தீர்மானிக்கப்படுகிறது.
உங்களின் நன்கொடை குழந்தைகளின் உயிர் காக்கும். என்றென்றும் உங்களின் ஆத்மாக்கு நிம்மதியும், பெருமிதத்தைத் தரும். தங்களால் முடிந்த தொகையை லிட்டில் மொப்பெட் ஃபவுண்டேஷனுக்கு நன்கொடையாக அனுப்பி வையுங்கள்…
சின்னச் சிறு இதயங்களைக் காக்க இணைவோம்… நீங்கள் தரும் நன்கொடை… குழந்தைகளின் வாழ்நாள் பரிசு…
நன்கொடை கொடுப்பதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply