Banana Wheat Cereal for babies in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
6 மாதம் முதல் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வாழைப்பழம் கோதுமை கஞ்சி
குழந்தைகளுக்கு சத்தான உணவைத் தேடி தருவதில் நமக்கு எப்போதும் அலுக்காது. ஏனெனில் குழந்தைகள்தான் நமக்கு எல்லாமும். அவர்களின் வளர்ச்சியில் நாம் செய்யும் ஒவ்வொரு உணவிலும் போஷாக்கும் இருக்கும் அன்பும் நிறைந்திருக்கும். திடமான உணவு, அதேசமயம் வயிறு நிறையும் உணவாக ஒரு ரெசிபி இருக்கிறது. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
வாழைப்பழம் கோதுமை ஹெல்தி கஞ்சி
- வாழைப்பழம் கோதுமை கஞ்சி பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
- ஆப்பிள் கூழ் – 1 டேபிள்ஸ்பூன்
- உலர்ந்த நட்ஸ் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு கப்பில் சிறிதளவு தண்ணீரில், வாழைப்பழம் கோதுமை கஞ்சி பவுடரை மிக்ஸ் செய்து கரைக்கவும்.
- அடுப்பில் தேவையான அளவு வெந்நீர் வைத்து, கரைத்து வைத்திருக்கும் வாழைப்பழம் கோதுமை கஞ்சி பவுடரை கலந்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- வெந்த பிறகு ஆப்பிள் கூழ் கலந்து, ஒரு நிமிடத்துக்குக் கலக்கவும்.
- உலர்ந்த நட்ஸ் பொடியை கலந்தவுடன் அடுப்பை உடனே நிறுத்திவிடவும்.
0-11 மாத குழந்தைகளுக்கு, வெதுவெதுப்பான சூட்டில் இந்தக் கஞ்சியைக் கொடுக்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மேற்சொன்ன செய்முறையோடு ஆப்பிள் கூழுக்கு பதிலாக அரை டம்ளர் தேங்காய்ப் பாலும் கலந்து ஒரு நிமிடம் சூடேற்றி, பின் லிட்டில் மொப்பெட் வெல்லத் தூளும் கலந்து, கொடுப்பது நல்லது.
பலன்கள்
- நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் நீங்கும்.
- ஆரோக்கியமான எடை அதிகரிக்க உதவும்.
- வயிறு நிறைந்து குழந்தைகள் நன்றாகத் தூங்கும்.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
- மல்டிவிட்டமின்கள் அடங்கியுள்ளதால் சத்துக் குறைபாடு நீங்கும்.
- குழந்தைகளின் சருமத்தில் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு சருமம் ஆரோக்கியத்துடன் பராமரிக்கப்படும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply