Fresh Fruit Kuchi Ice:கோடை வெயில் இப்பொழுதே கொழுத்த ஆரம்பித்து விட்டது.குழந்தைகள் அனைவரும் கேட்டு நச்சரிப்பது ஐஸ் கிரீம் மற்றும் ஜூஸ் வகைகள்தான்.நாம் பெரும்பாலும் ஐஸ் கிரீம்களை கடைகளில் வாங்குவதுதான் வழக்கம்.ஆனால் அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் கலந்திருப்பதால் நாம் அடிக்கடி கொடுக்க தயங்குவோம்.இனி கவலை வேண்டாம்.குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் ஹெல்தியான குச்சி ஐஸ்.அதுவும் பிரெஷான பழங்களுடன்.இனி குழந்தைகளுக்கு அடிக்கடி ஐஸ் க்ரீம் தயங்காமல் கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பிரெஷ் ஃபுரூட் குச்சி ஐஸ்
- தேங்காய் தண்ணீர் – 1 கப்
- ஸ்ட்ராவ்பெரிஸ் – 3-4
- கிவி பழம் – 2
இதையும் படிங்க: ஹோம் மேட் நன்னாரி சர்பத்
Fresh Fruit Kuchi Ice
செய்முறை
1.ஸ்ட்ராவ்பெரி பழங்களை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.கிவி பழத்தின் தோலை நீக்கி வட்ட வட்டமாக நறுக்கவும்.
3.நறுக்கி வைத்த பழங்களை குச்சி ஐஸ் மோல்டில் போடவும்.
இதையும் படிங்க:ஈசி கஸ்டர்ட் பழ சாலட்
4.தேங்காய் தண்ணீரை மோல்டில் ஊற்றி நிரப்பவும்.
5.குச்சி ஐஸ் மோல்டினை மூடி பிரீசரில் வைக்கவும்.
6) 2-3 மணி நேரங்கள் ஐஸ் நன்றாக உறையும் வரை காத்திருக்கவும்.
7.பிரீசரில் இருந்து மோல்டை எடுத்து வெது வெதுப்பான தண்ணீரை மேலே ஊற்றி ஐஸினை தனியாக பிரித்து எடுக்கவும்.
ஸ்ட்ராவ்பெரி மற்றும் கிவி பழங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்தமான பழங்களை உடன் சேர்த்து கொள்ளலாம்.தேங்காய்தண்ணீருக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ் மற்றும் நமக்கு விருப்பமான பிளேவர்களில் ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.இனிப்பு சுவை தேவைப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.
ஆரோக்யமானதாக மட்டுமல்லாமல் பார்க்க வண்ணமயமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள்.குழந்தைகளுக்கு விருப்பமான பிளேவரில் வித விதமாக செய்து கொடுத்தால் கடைகள் விற்கும் ஐஸ்களை கேட்டு அடம் பிடிக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply