Kulandaikku endha alavu saapida kodukkalaam?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைக்கு எந்த அளவு சாப்பிட கொடுக்கலாம்?
குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியும் என்ற சந்தேகம் எல்லா அம்மாக்களும் பெரும் சந்தேகத்தை எழுப்பும் கேள்வியாக இருக்கும். அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரமிது…
ஒரு வயது முதல் 3 வயது வரையிலான குழந்தைக்கு அவர்களின் உயரத்தை பொறுத்து ஒரு நாளுக்கு 40 கலோரிகள் அதிகமானால் போதும் என்கிறது அமெரிக்கன் அசோஷியேசன் ஆஃப் பீடியாட்ரிக்ஸ்…
ஆனால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்து தான். நாம் அவர்கள் சாப்பிடும் உணவுகளில் கலோரியின் அளவை கணக்கிட முடியுமா என்றால் நிச்சயம் கடினமான காரியம் தான்…
பொதுவாக ஒரு குழந்தை எவ்வளவு சாப்பிடும் என்பது குறித்து ஒரு அட்டவணை தந்திருக்கிறேன்…
ஒருவேளை உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்றால் கவலைப்பட வேண்டாம். இதனை நீங்கள் சரியாக பின்பற்ற முடிந்தால் நல்லது தான்…
குழந்தைக்கு சாப்பிட எவ்வளவு கொடுக்கலாம்?
ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமான குணாதிசயங்கள் உண்டு. அவர்களின் விருப்பத்திற்கேற்ற மாதிரி உணவு சாப்பிடுவதிலும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்…
- தானியங்கள் 3 முதல் 4 முறைகள்
- காய்கறிகள் 2 முதல் 3 முறைகள்
- பழங்கள் 3 முதல் 4 முறைகள்
- பால் பொருட்கள் 4 முதல் 5 முறைகள்
- புரதச்சத்து உணவுகள் 2 முறைகள்
ஒரு முறை கொடுக்கும் உணவு என்பது அவர்களின் நடவடிக்கையை பொறுத்து மாறுபடும். நாம் சாப்பிடும் உணவில் 4ல் ஒரு பங்கை அவர்களுக்கு கொடுத்தால் போதும்…
1. ஒரு முறை கொடுக்கும் தானியத்தின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு முறை கொடுக்கும் உணவு என்பது கீழ்க்கண்டவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்…
- பருப்பு வகைகள் அல்லது சாதம் – கால் கப் முதல் அரை கப் வரை
- முழு கோதுமை பிரெட் – ஒரு ஸ்லைஸ்
- கோதுமை அல்லது அரிசி சார்ந்த கஞ்சி – கால் கப் முதல் அரை கப் வரை
- ரொட்டி/ பரோட்டா /பான்கேக் – சிறிய அளவில் ஒன்று
- தோசை /இட்லி – சிறிய அளவில் ஒன்று
2. ஒரு முறை கொடுப்பதில் காய்கறிகள் எவ்வளவு இருத்தல் அவசியம்?
ஒரு முறை கொடுக்கும் காய்கறிகள் என்பது :
- 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வேகவைத்த காய்கறிகளை சாதத்திலும், வறுத்தும் தரலாம். அல்லது வயதிற்கேற்ற மாதிரி ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தரலாம்…
3. ஒருமுறை கொடுக்கும் பழங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
ஒரு முறை கொடுக்கும் பழங்கள் என்பது :
- ஒன்று அல்லது அரை பழத்தை அப்படியே அல்லது ஆவியில் வேகவைத்து தரலாம்.
- கால் கப் பழத்தை அப்படியே ஜூஸ் செய்து தரலாம்…
4. ஒரு முறை கொடுக்கும் பால் சார்ந்த பொருட்களின் அளவு என்ன?
ஒரு முறை கொடுக்கும் பால் சார்ந்த பொருள் என்பது :
- அரை கப் பால் அல்லது அரை கப் யோகர்ட்
- சீஸ் ஒரு இன்ச் க்யூப்
- பனீர் 50 கிராம்
ஒரு முறை கொடுக்கும் புரத உணவில் கீழ்க்கண்ட எந்த வடிவிலும் தரலாம்…
- 20 முதல் 30 கிராம் வரையிலான இறைச்சி
- ஒரு முட்டை
- 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் வேகவைத்த பருப்பு அல்லது பருப்பு சாதம்…
இதில் குறிப்பிட்ட எல்லாம் ஒரு வழிகாட்டி தானே தவிர நீங்கள் இதை தான் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. நீங்கள் கொடுக்கும் உணவுகளில் சத்துகள் நிரம்பி இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்து உணவுகளையும் குழந்தை ஒரே மாதிரியாக சாப்பிட வேண்டும். மேலும் சத்தான உணவுகளை நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை கொடுக்கலாம்…
உங்கள் குழந்தையின் வயிறு நிரம்பியவுடன் உணவு கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். டிவி பார்த்துக் கொண்டோ, வலுக்கட்டாயமாகவோ உணவை ஊட்டாதீர்கள். இது உங்கள் குழந்தையின் உணவு பழக்கத்தையே மாற்றிவிடும்…
உங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் நீங்கள் இதனை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply