Instant Jam Mix: ஜாம் என்ற வார்த்தையை கேட்டாலே நம் குட்டிகளின் கண்கள் கோழி முட்டை போன்று பெரிதாகும். அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு ஜாம் என்றால் பிரியம். பிரட்டிற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, தோசை ஏன் இட்லிக்கும் கூட ஜாம் தொட்டு சாப்பிடும் குழந்தைகள் உண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் நமக்குத்தான் செயற்கை நிறமூட்டிகள் நிறைந்த ஜாமினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு உள்ளூர பயம் இருக்கும். என்னதான் பழங்கள் சேர்த்திருக்கின்றன என்று விளம்பர நிறுவனங்கள் ப்ரொமோட் செய்தாலும் அதில் உண்மையாகவே பழம் சேர்க்கப்படுகின்றதா என்பது நமக்கே தெரியும்.
குழந்தைகளுக்கு ஜாம் என்றாலே மிகவும் பிரியம். அதேநேரம் குழந்தைகளையும் சமாதானப்படுத்த வேண்டும் அல்லவா? இதற்கு மாற்றாக, என்ன செய்து கொடுக்கலாம் என்று நான் யோசித்து தயாரித்த ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸ்.
எங்களிடம் தினசரி அம்மாக்கள் கேட்கும் கேள்வி குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் ரெசிபிகளில் ஹெல்தியான பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு பிடித்த வகையில் எப்படி கொடுப்பது என்பது தான்.
அதற்காகத்தான் நான் புதிதாக அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு ரெசிபியும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மையமாக வைத்தே இருக்கும்.
உங்களுக்கு வீட்டில் இந்த இன்ஸ்டன்ட் பனானா ஜாம் மிக்ஸ் இருந்தால் குழந்தைகளுக்கு பிடித்தமான ஜாமை எளிதாக நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். மேலும் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.
மேலும் இதன் நிறமும் குழந்தைகளை கவரும் வண்ணம் இருப்பதால் ஒரு முறை சாப்பிட்ட குழந்தைகள் மறுமுறை கட்டாயம் கேட்டு வாங்கி உண்பார்கள்.
Instant Jam Mix
Instant Jam Mix:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பீட்ரூட் மற்றும் வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- பீட்ரூட்டில் இயற்கையாகவே நார் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சொல்ல போனால் இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு முக்கியமாகும்.
- பீட்ரூட் நிறைந்துள்ள மெக்னீசியம் எலும்புகள் கட்டமைப்பிற்கும், மெட்டபாலிசம் நடைபெறுவதற்கும் முக்கியமாகும்.
- இதில் நிறைந்துள்ள நைட்ரேட்டுகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கின்றது.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 அதிகம்.
- மேலும் நார் சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- பீட்ரூட் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டிலும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் கள் நிறைந்துள்ளன, இவை செல்கள் சிதைவடையாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வல்லது.
- வாழைப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் பி6 மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பீட்ரூட்டில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் உடம்பில் நீச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் உதவுகின்றது.
Instant Jam Mix:
- இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸ்- 1 கப்
- நாட்டு சக்கரை- அரை கப்
- நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்- 150 மில்லி
Instant Jam Mix:
செய்முறை
- ஒரு கப் ஜாம் மிக்ஸ் உடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
- மிதமான தீயில் வைத்து கலவையை நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
- மூன்று டேபிள் ஸ்பூன் சக்கரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறவில்லையெனில் அடி பிடித்து விடும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடைசியாக கிளறவும்.
- ஜாமை ஆற வைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.
இதில் சீனிக்கு பதிலாக நாட்டு சக்கரை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு சத்தான ரெசிபியாக இருக்கும். இனி உங்கள் குழந்தைகள் ஜாம் என்று கேட்டால் நீங்கள் மனதிருப்தியுடன் இது கொடுக்கலாம் தானே!
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Instant Jam Mix
Instant Jam Mix
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஜாமினை கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஜாமினை கொடுக்கலாம்.
இந்த ஜாமினை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
இந்த ஜாமினை செய்ய 10-15 நிமிடங்கள் போதுமானது.
இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?
நன்றாக மூடி, காற்று போகாமல் வைத்து பராமரித்தால் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஜாமை செய்தவுடன் பாட்டிலில் எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?
ஜாமை செய்தவுடன் காற்று போகாத பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
ஹெல்த்தியான இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸ்
Ingredients
- இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸு- ஒரு கப்
- நாட்டு சக்கரை- அரை கப்
- நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்- 150 மில்லி
Leave a Reply