Banana Oats Cookies: குழந்தைகளுக்கு எவ்வளவுதான் நாம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் பேக்கரிகளில் விற்கும் ஸ்நாக்ஸ் என்றால் அலாதி பிரியம் தான்.அதனால் தான் தற்பொழுது அம்மாக்கள் கேக்குகள், பிரௌனிகள் மற்றும் குக்கீஸ் போன்றவற்றை வீட்டிலேயே செய்து கொடுக்க தயாராகி விட்டனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே தான் ஹோம் மேட் குக்கீஸ்களை அம்மாக்கள் தற்பொழுது விரும்பி குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பனானா ஓட்ஸ் குக்கீஸ்.
Banana Oats Cookies:
இன்று பெரும்பாலான வீடுகளில் ஓவன் உள்ளது என்பதால் ஓவன் இருந்தால் இந்த ஆரோக்கியமான குக்கீஸ்க்களை நீங்கள் குழந்தைகளுக்கு முயற்சித்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓட்ஸ் மற்றும் வாழைப்பழத்துடன் சீனி கலக்காமல் இயற்கையாக நாட்டு சர்க்கரை சேர்த்து செய்துள்ளதால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கொடுப்பதற்கான ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இது இருக்கும்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஓட்ஸ் மற்றும் வாழைப்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- வாழைப்பழத்தில் கலந்துள்ள இயற்கையான இனிப்புச் சுவையானது குழந்தைகளுக்கு ஆற்றலை தரும் என்பதால் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் ஓட்ஸில் கலந்துள்ள கார்போஹைட்ரேட்டும் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது.
- வாழைப்பழத்தில் நிறைந்துள்ள நார் சத்துக்கள் செரிமான மண்டலத்தை தூண்டி மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- மேலும் ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கியமான எடை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் குழந்தைகளின் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க வேண்டும் என்று கவலைப்படும் அம்மாக்களுக்கு ஸ்நாக்ஸ் நல்லதொரு தீர்வாகும்.
- வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஆகிய இரண்டிலும் நிறைந்துள்ள வைட்டமின் பி6, இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் வாழைப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மினரல்கள் போன்றவை குழந்தைகளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- இந்த பிஸ்கட்டில் நிறைந்துள்ள பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் இயற்கையான ப்ரோட்டீன் போன்றவை குழந்தைகள் எலும்புகளில் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- நல்ல சுவையுடன் இருப்பதால் குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தை குறைத்து அந்த உணவுகளை சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும்.
- மேலும் ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் இரண்டுமே குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நல்ல உணவு என்பதால் குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக்கலாம்.
Banana Oats Cookies
- வாழைப்பழம்-1
- கோதுமை மாவு-2 டேபிள்ஸ்பூன்
- ஓட்ஸ்-3/4 கப்
- நாட்டுச்சக்கரை-1-2 டீ.ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்-1-2 டீ.ஸ்பூன்
- சாக்கோ சிப்ஸ்-1-2 டேபிள் ஸ்பூன்
- பட்டை- சிறிதளவு
Banana Oats Cookies
செய்முறை
- வாழைப்பழத்தை கட்டிகள் இல்லாமல் நன்கு பிசையவும்.
- அதனுடன் ஓட்ஸ், கோதுமை மாவு, பட்டை நாட்டு சக்கரை சேர்த்து நன்கு பிசையவும்.
- இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மாவு பதத்திற்கு மென்மையாக பிசையவும்.
சாக்கோ சிப்ஸ்களை இதன் மேல் தூவவும். - பேக்கிங் ட்ரேயின் மீது லேசாக வெண்ணையை தடவி அதன்மேல் மாவினை குக்கீஸ் வடிவத்திற்கு தட்டி வைக்கவும்.
- 12 முதல் 15 நிமிடங்களுக்கு 170 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்துடன் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
சிறிது ஆரியதும் குக்கீசை எடுக்கவும். - குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த பனானா ஓட்ஸ் குக்கிஸ் என்பது நல்ல தேர்வாகும்.
- குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் கால் உடன் சேர்த்து கொடுப்பதற்கு இது நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கும். சாக்கோ சிப்ஸ் மேலே தூவி இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Banana Oats Cookies:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாமா? ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இந்த குக்கீசை கொடுக்க வேண்டும்.
சாக்கோ சிப்ஸ்கள் சேர்க்காமல் இதனை தரலாமா?
சாக்கோ சிப்ஸிகளுக்கு பதிலாக பேரிச்சை, நட்ஸ் போன்றவற்றை தூவி பரிமாறலாம்.
எத்தனை நாட்கள் வரை இதனை வைத்து பயன்படுத்தலாம்?
காற்று போகாத டப்பாவில் அடைத்து இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.











Leave a Reply